Tuesday, April 10, 2012

எளிமை விரும்பி

சாதாரணக் கட்டணம்
என்ற அறிவிப்பு
மின்னியது
பேருந்து
முன்புறத்து

ஏறி இருக்கை
தேட
இருக்கை
'சொகுசு' என்றது
ஒத்துக்கொள்ளாது என
இறங்கிவிட்டேன்
எளிமை விரும்பி நான்.      

காபி மணம்

கிண்கிணி நாதம்
காதைக் கிள்ளிச்
செல்கிறது
பால் சொம்பெடுத்து
ஓடுகிறேன்
வெளியில்
காபி மணம்
நெஞ்சை நிறைக்க.
     

குழந்தை

பிஞ்சுக் கால்களால்
நெஞ்சில் உதைத்த
கொஞ்சு மழலையின்
கால்களை கையிலேந்தி
முத்தமிட்டேன் அன்று

பஞ்சாய் நரைத்து
நிலை தடுமாறும் என்
கை பிடித்து
இழுத்துச் செல்கிறது
அந்தக் குழந்தை
இன்று.